தனியுரிமை கொள்கை

பொள்ளாச்சி ‌FM வானொலி இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக தமிழில் உருவாக்கப்பட்டது. வானொலி மீது பேரன்பு கொண்ட நேயர்கள் தங்கள் ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடாக உருவாகியிருக்கும் இணைய வழி வானொலியே எமது பொள்ளாச்சி ‌FM. நேயர்களின் இசைத் தேடலுக்கு தீர்வளிக்கும் வானொலியாகவும் பொதுசேவையாகவும் விளங்குவதோடு, நமது தமிழர் மரபு, கலை, இசை, கலாச்சாரம், இலக்கியம், கிராமியக் கலைகள், இயற்கை, வேளாண்மை, சுற்றுச் சூழல், ஆன்மீகம், மருத்துவம் பற்றிய நிகழ்ச்சிகளை வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உயர் தர இசையில் ஒலிபரப்புகிறோம். இந்த தளம் இந்திய பாரம்பரியம், தமிழ் கலாச்சாரம், தார்மீக நெறிமுறைகளையும் பின்பற்றுகிறது. இந்த வலை சேவையில் பங்கேற்பாளர்கள் தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பெருகின்றனர். இந்த தளத்தினால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் நேரடியாக மற்றவர்களிடமிருந்து எந்த நன்மையையும் பெற முயற்சிக்கவில்லை. மேலும் தகவலுக்கு மின்அஞ்சல் [email protected]

Close Menu